ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி வழங்க கூடாது தேர்தல் ஆணையம் கடிதம். - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி வழங்க கூடாது தேர்தல் ஆணையம் கடிதம்.

 


சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முன்னதாக தமிழக அரசியல் கட்சிகளும் தங்களது சார்பில் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி உள்ளன. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.தமிழகத்தில் 6 மாதங்களில் ஓய்வு பெற உள்ள எந்தவொரு அரசு அதிகாரிகளுக்கும் தேர்தல் பணி வழங்கக் கூடாது.
தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் அவரது சொந்த மாவட்டங்களில் பணியாற்றக் கூடாது. முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை தேர்தல் பணிக்கு நியமிக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட சில அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்பட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment