மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/12/2020

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

 


பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை நாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


’’பத்தாம் வகுப்புத் துணைத் தேர்வு எழுதி, மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல்  http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 09.12.2020 (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்குத் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்பட்டியலில் இடம் பெறாத தேர்வெண்களுக்கான விடைத்தாட்களின் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது’’.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்புத் துணைத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 21 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்க்து

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459