இந்தியாவில் ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலை கிளைகள்?: சட்டத்தில் சில திருத்தங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/10/2020

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலை கிளைகள்?: சட்டத்தில் சில திருத்தங்கள்

 


சில கல்வி நிலையங்கள் ஏற்கெனவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. பாதிப் படிப்பை இந்தியாவில் மேற்கொள்ளும் மாணவர்கள், பல்கலைக்கழகக வளாகங்களில் படிப்பை முடிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.

“உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு நிகராக கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். குறிப்பாக, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளையை இந்தியாவில் தொடங்கவும் அவற்றை ஒழுங்குபடுத்தவும் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்யவேண்டியுள்ளது. இதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுவருகிறது” என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிலையங்கள் உள்ளன. நம்முடைய உயர்கல்வி முறை உலகிலேயே மிகப்பெரியதாக உள்ளதாகவும், உலகில் 55 நாடுகளுடன் கல்வி தொடர்பான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459