பப்ஜி கேமில் துப்பாக்கி வாங்க தந்தை ரூ.3 லட்சம் தராததால் 12-ம் வகுப்பு மாணவன் தற்கொலை - ஆந்திராவில் சோகம் - ஆசிரியர் மலர்

Latest

10/10/2020

பப்ஜி கேமில் துப்பாக்கி வாங்க தந்தை ரூ.3 லட்சம் தராததால் 12-ம் வகுப்பு மாணவன் தற்கொலை - ஆந்திராவில் சோகம்

 


ஆந்திராவில் பப்ஜி கேம் விளையாடுவதற்கு அப்பா பணம் தராததால் ப்ளஸ் டூ மாணவன் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. 

 

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த பப்ஜி ஆன்லைன் விளையாட்டை சமீபத்தில் மத்திய அரசு தடை செய்தது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பிடிஆர் காலனியை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் தேஜோஸ். இரவு பகல் பாராமல் தேஜோஸ் பப்ஜி கேம் விளையாடும் வழக்கத்தை கொண்டிருந்தார். பப்ஜி விளையாட்டிற்கு ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆன்லைன் லிங்க் மூலம் பப்ஜி விளையாட்டில் இளைஞர்கள் ஆந்திராவில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். இந்தநிலையில் பப்ஜி விளையாட்டில் விளையாடுவதற்கு தேவையான துப்பாக்கி வாங்க மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டு தேஜோஸ் தந்தை பாஸ்கருக்கு தொல்லை கொடுத்து வந்தார். 

 

தேஜோஸ் தந்தை மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுக்க மறுத்து விட்ட காரணத்தால் இன்று தேஜோஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 

இதுபற்றிய தகவலறிந்து திருப்பதி போலீசார் விரைந்து சென்று தேஜோஸ் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.-News18

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459