இன்றைய ராசிபலன் - ஆசிரியர் மலர்

Latest

08/10/2020

இன்றைய ராசிபலன்

 


மேஷம் 

 

மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். 

 

 

ரிஷபம் 

 

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் மதிப்பு, மரியாதை உண்டாகும். மகிழ்ச்சியான நாள். 

 

 

மிதுனம் 

 

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோவப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். 

 

 

கடகம் 

 

கடகம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். 

 

 

சிம்மம் 

 

சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள். 

 

 

கன்னி 

 

கன்னி: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள். 

 

 

துலாம் 

 

துலாம்: கடந்த சில நாட்களாக இருந்து வந்த அலைச்சல் நீங்கி குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். தொழிலால் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றங்கள் நிறைந்த நாள். 

 

 

விருச்சிகம் 

 

விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள். 

 

 

தனுசு 

 

தனுசு: உங்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 

 

 

மகரம் 

 

மகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேச தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்புவரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 

 

 

கும்பம் 

 

கும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதியவாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள். 

 

 

மீனம் 

 

மீனம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும், எதிர்பார்த்த இடத்திலிருந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459