ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வருவாய்த்துறையில் வேலை வேண்டுமா? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வருவாய்த்துறையில் வேலை வேண்டுமா?
சிவகங்கை மாவட்ட வருவாய்த்துறையில் நிரப்பப்பட உள்ள 45 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 45

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், (பொது) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a comment