நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தலில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது - ஆசிரியர் மலர்

Latest

01/10/2020

நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தலில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது

 


இந்தியாவில் அதிகரித்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பணபரிவர்த்தனைகளில் டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனிடையே சமீபகாலமாக இந்தியாவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் உபயோகிப்பாளர்களிடமிருந்து அதிகளவில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த புகார்கள் பெரும்பாலும், அதிகளவில் பணம் வசூலிப்பது. உரிய விளக்கம் அளிக்காதது உள்ளிட்ட புகார்களே அதிகம் வந்துள்ளன. 

இதன் காரணமாக நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தலில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்து நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. 

இந்த புதிய விதிமுறைகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

புதிய விதிமுறைகளில் படி அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள ஏ.டி.எம் மற்றும் (Point of Sale ) இயந்திரகளில் மட்டுமே உபயோகிக்க முடியும். வெளிநாடுகளில் உபயோகிக்க முடியாது. 

வாடிக்கையாளர் இந்தியாவுக்கு வெளியே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை உபயோகிக்க வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட வங்கிகளில் கேட்டு அந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம். இருப்பினும் இந்த அறிவிப்புக்கு முன்னர் வங்கிகள் மூலம் கார்டுகள் பெற்றிருப்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது. 

இருப்பினும் உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வங்கிகள் தங்கள் அபாய உணர்வின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம் அல்லது முடக்கலாம்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்தாத கார்டுகளை தடை செய்யுமாறு அனைத்து வங்கிகளையும் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களையும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. 

புதிய விதிகளின்படி, மக்கள் இப்போது புதிய சேவைகளை தேர்வு செய்வது, அல்லது விலகுவது, ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் உள்ளிட்ட வற்றுக்கும் பதிவு செய்ய முடியும்.

புதிய விதிகளின் படி வாடிக்கையாளர்கள் இனி 24 மணி நேரமும் பரிவர்த்தனை வரம்புகளையும் மாற்ற முடியும். மொபைல் செயலிகள் , இணையவழி வங்கி சேவை, ஏடிஎம் இயந்திரம், ஐவிஆர் கால் சேவைகளில் மூலம் பரிவர்த்தனை வரம்புகளை மாற்றிக்கொள்ளலாம். 

டெபிட் மற்றும் கிரெடிட் இரண்டு கார்டுகளையும் வைத்திருப்பவர்களுக்கு தங்களின் வரம்பை அமைக்க இந்த புதிய வசதி உதவும்.

இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 

இந்த விதிமுறைகள் அனைத்தும் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007 இன் பிரிவு 10 (2) இன் கீழ் வழங்கப்படுவதாக ரிசர்வ் வன்”என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459