தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? AICTE-க்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது: ஐகோர்ட் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? AICTE-க்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது: ஐகோர்ட்


 தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது எனவும் கூறியுள்ளது. கொரோனா பரவலால் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை ஏற்க இயலாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்திருந்தது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 


கலை அறிவியல் மற்றும் பொறியியல் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையே பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை ஏற்கமுடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தாக கூறப்பட்டது.


ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையின் போது ஏஐசிடிஇ தனது முடிவை தெரிவிக்கும் என்று அகில இந்திய தொழில்நுட்ப குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே ஏற்கனவே கூறியிருந்தார். அண்ணா பல்கலை. துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்தில் அரியர் ரத்து தவறான முடிவு என கூறியுள்ளேன். அரியர் தேர்வு பற்றி தமிழக அரசு தரப்பில் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று ஏஐசிடிஇ தலைவர் அனில்  சகஸ்ரபூதே தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment