டெல்லி: பள்ளி கல்வியை மேம்படுத்த ரூ.5,718 கோடி மதிப்பிலான உலக வங்கியின் ஸ்டார்ஸ் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநிலங்களுக்கு கற்பித்தல்-கற்றல் மற்றும் முடிவுகளை வலுப்படுத்தும் (ஸ்டார்ஸ்) திட்டத்தை ரூ.5718 கோடி செலவில்அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியில் ரூ.3700 கோடி அளவுக்கு உலக வங்கி நிதியுதவி அளிக்கிறது. ஸ்டார் திட்டம், கல்வித்துறை அமைச்சகத்தின், பள்ளி கல்வித்துறையின் கீழ் மத்திய அரசின் புதிய திட்டமாக அமல்படுத்தப்படும்.மத்திய அரசின் பள்ளி கல்வித் துறையின் கீழ் 'பராக்' என்ற தேசிய மதிப்பீடுமையம் அமைக்கப்படுகிறது. இத்திட்டம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. இந்த மாநிலங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்த தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்கும். இதே போன்ற திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், குஜராத், தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்கஙளில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் தங்கள் அனுபவங்கள் மற்றும் சிறந்த முறைகளை ஒன்றுக்கொன்று பகிர்ந்து கொள்ளும். பள்ளிகளில் கல்வியை மேம்படுத்தவும், மதிப்பீடு செய்யவும், வேலை வாயப்புகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களை திறமையானவர்களாக மாற்றவும் தேவையான உதவிகளை ஸ்டார்ஸ் திட்டம் வழங்கும். ஸ்டார்ஸ் திட்டத்தின் ஒட்டு மொத்த கவனம் மற்றும் அம்சங்கள், தேசிய கல்வி கொள்கை நோக்கங்களுடன் இணைக்கப்படுகின்றன. இந்த ஸ்டார் திட்டம் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில், பள்ளி கல்வி முறையை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தவும், கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும், திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டார்ஸ் திட்டத்தில் 2 முக்கிய அம்சங்கள் உள்ளன: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது - கல்வித்துறை பதில் தர ஹைகோர்ட் உத்தரவு 1) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயன்பெறும் வகையில் கீழ்கண்ட நடவடிக்கைகளை தேசியளவில் மேற்கொள்ள இத்திட்டம் வழிவகுக்கிறது: மாணவர்களைத் தக்கவைத்தல், மாற்றம் செய்தல் மற்றும் கல்வி நிறைவு விகிதங்கள் குறித்த வலுவான மற்றும் உண்மையான தகவல்களை திரட்ட கல்வி அமைச்சகத்தின் தேசிய தரவு அமைப்புகளை வலுப்படுத்துதல். ஊக்கத் தொகை மானியம் அளித்து, மாநிலங்களின் செயல்பாடு தர அளவீடை(பிஜிஐ) மேம்படுத்த கல்வி அமைச்சகத்துக்கு உதவுதல் கற்றல் மதிப்பீடு முறைகளை வலுப்படுத்த உதவுதல். தேசிய மதிப்பீடு மையம் (பராக்) அமைக்க உதவுதல். தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கல்வி தொடர்பான அனுபவங்களை ஆன்லைன் மூலமா பகிர்ந்து கொள்வதை ஊக்கப்படுத்துவது இந்த மையத்தின் பணிகளில் ஒன்றாக இருக்கும்.மேலும், ஸ்டார் திட்டத்தில் அவசர கால நடவடிக்கை அம்சமும் () உள்ளது. இயற்கை, செயற்கை மற்றும் சுகாதார பேரிடர் ஏற்படும் சூழ்நிலையில், இது அரசுக்கு உதவும். தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொலை தூர கல்விக்கு ஏற்பாடு செய்யும். 2) மாநில அளவில், இத்திட்டம் ஆரம்பகால குழந்தை பருவ கல்வி மற்றும் அடிப்படை கல்வியை வலுப்படுத்தும். கற்றல் மதிப்பீடு முறைகளை வலுப்படுத்தும். வழிகாட்டுதல் மற்றும் கவுன்சலிங் மூலம் பள்ளிகளில் தொழில் கல்வியை வலுப்படுத்தப்படும். பிரதமரின் இ-வித்யா, அடிப்படை கல்வி திட்டம், குழந்தை பருவ கல்விக்கான தேசிய பாடத்திட்டம் போன்ற நடவடிக்கைகளிலும் ஸ்டார்ஸ் திட்டம் கவனம் செலுத்தும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில், 3வது மொழியில், மாணவர்கள் குறைந்த பட்ச புலமை பெற்றிருப்பதை அதிகரிக்கும் சில நடவடிக்கைகளும் இந்த ஸ்டார்ஸ் திட்டத்தில் உள்ளன.இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post Top Ad
Home
அமைச்சர்
பள்ளி கல்வியை மேம்படுத்த ரூ.5718 கோடி மதிப்பிலான உலக வங்கி திட்டம்- அமைச்சரவை ஒப்புதல்

Subscribe to:
Post Comments (Atom)
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
No comments:
Post a comment