நீட் தேர்வு முடிவுகள் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி வெளியீடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நீட் தேர்வு முடிவுகள் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி வெளியீடு


 நீட் தேர்வு (கோப்புப்படம்)நீட் தேர்வு முடிவுகள் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகும் என அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளார். 

முன்னதாக, கரோனா பாதிப்பு மற்றும் பொதுமுடக்கம் காரணமாக நீட் தேர்வை எழுதத் தவறிய மாணவர்களுக்கு அக். 14 ஆம்  தேதி தேர்வு நடத்த, தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று தேர்வு முடிவினை அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடவும் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

No comments:

Post a Comment