தில்லி பல்கலைக்கழத்தில் முதன்முறையாக முழு ஆன்லைன் சேர்க்கை தொடக்கம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தில்லி பல்கலைக்கழத்தில் முதன்முறையாக முழு ஆன்லைன் சேர்க்கை தொடக்கம்

 Delhi University starts its first fully online admission process

 

கரோனா பரவல் காரணமாக தில்லி பல்கலைக்கழத்தில் முதன்முறையாக முழு ஆன்லைன் சேர்க்கை செயல்முறையை இன்று முதல் தொடங்கியுள்ளது. 

இந்தாண்டு தில்லி பல்கலையில் முழு ஆன்லைன் சேர்க்கை முறை நடைபெறுவதால், கல்லூரி மாணவர்களை நேரில் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

பல்கலைக்கழகம் தனது முதல் கட்-ஆப் பட்டியலை சனிக்கிழமையன்று அறிவித்தது. லேடி ஸ்ரீ ராம் கல்லூரி ஹானர்ஸ் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை 100 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

சேர்க்கை செயல்முறை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது என்று பல்கலைக்கழக டீன் ஷோபா பாகாய் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் சேர்க்கைக்கான கிளை அதிகாரிகள், குறை தீர்க்கும் அதிகாரிகள் மற்றும் நோடல் அதிகாரிகள் உள்ளனர். மாணவர்கள் அதைப் பயன்படுத்திகொள்ளலாம். 

சேர்க்கை செயல்முறைகள் மற்றும் மதிப்பெண்களைக் கணக்கிடுவதற்கான வழிகாட்டுதல்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. ஐந்து வருடத்திற்கு பின்னர் தில்லி பல்கலைக்கழத்தில் இளங்கலை சேர்க்கைக்கு 100 சதவீதம் கட்-ஆப் அறிவித்துள்ளது. 

தில்லி பல்கலையில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் இடங்களுக்கு இதுவரை 3.57 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

No comments:

Post a comment