கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி: 16-ம் தேதி முடிவுகள் வெளியீடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி: 16-ம் தேதி முடிவுகள் வெளியீடு

 


டெல்லி: கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14-ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி  உள்ளது.  இந்த நிலையில் நீட் தேர்வின் முடிவுகள்  வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் இன்று தேசிய தேர்வு முகமை, அதிகாரப்பூர்வ வலைத்தளமான ntaneet.nic.in இல் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment