அரசு மாணவர் விடுதியில் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

அரசு மாணவர் விடுதியில் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. பதவி: சமையலர் ஆண்கள் காலிப்பணியிடம்: 8, சமையலர் பெண்கள் காலிப்பணியிடம் 6, ஊதியம் ரூ.15700 மற்றும் இதர படிகள். பொதுப்பிரிவு மற்றும் ஆதிதிராவிடர், அருந்ததியர், மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்க தெரிய வேண்டும்.வயது வரம்பு: 1.07.2020 தேதியில் எஸ்சி, எஸ்டி 18 முதல் 35. மற்ற பிரிவினர் 18 முதல் 32. இதர பிரிவினர் 18 முதல் 30க்குள் மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது தளர்வு அளிக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மாணவர்கள் விடுதிகளில் முழுநேர சமையல் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள், செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பபடிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, உரிய சான்றுகளின் நகல்களை இணைத்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் வரும் 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a comment