புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு - தமிழக உயர்கல்வித்துறை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு - தமிழக உயர்கல்வித்துறை

 


சென்னை,

இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த புதிய கல்வி கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை நாளை ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது. இதில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a comment