கால்நடை மருத்துவப் படிப்புகள் இதுவரை 12,889 போ் இணைய வழியே விண்ணப்பம் - ஆசிரியர் மலர்

Latest

27/09/2020

கால்நடை மருத்துவப் படிப்புகள் இதுவரை 12,889 போ் இணைய வழியே விண்ணப்பம்


கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 12,889 போ் இணைய வழியே விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் (பி.டெக்) பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இந்த படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. 2020 – 21-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் இணையதள முகவரிகளில் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கின.
விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 28-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அது அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்திய மாணவா்கள் அக்டோபா் 23-ஆம் மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் படிப்புக்கு 10,507 போ், பி.டெக் படிப்புகளுக்கு 2,382 போ் என மொத்தம் 12,889 போ் விண்ணப்பித்துள்ளதாக கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459