பள்ளி திறப்பு விவகாரத்தில் முதல்வர் முடிவெடுப்பார்"- அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பள்ளி திறப்பு விவகாரத்தில் முதல்வர் முடிவெடுப்பார்"- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தெளிவான முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
த‌‌மிழ‌த்‌‌தில்‌‌‌ ‌அக்டோபர் 1-ஆம்‌‌ தேதி முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பப்பட்டால் சந்தேகம் கேட்க பள்ளிக்கு செல்லலாம் என தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக குழப்பம் நீடித்த நிலையில், பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் என கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment