யுபிஎஸ்சியின் தலைவராக பேரா.பிரதீப் குமார் ஜோஷி நியமனம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

யுபிஎஸ்சியின் தலைவராக பேரா.பிரதீப் குமார் ஜோஷி நியமனம்


யுபிஎஸ்சியின் தலைவராக கல்வியாளர் பேரா.பிரதீப் குமார் ஜோஷி நியமனம்

கல்வியாளர் பேரா.பிரதீப் குமார் ஜோஷி வெள்ளிக்கிழமை குடிமைப் பணி தேர்வு ஆணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக நியமிக்கப்பட்டார்.
யுபிஎஸ்சி தலைவராக இருந்த அரவிந்த் சக்சேனாவின் பதவிக் காலம் வெள்ளிக்கிழமை முடிவடைவதை அடுத்து பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் யுபிஎஸ்சியின் உறுப்பினராக உள்ளார்.
சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் பொது சேவை ஆணையங்களின் தலைவராக இருந்த ஜோஷி, மே 2015 இல் யுபிஎஸ்சியில் உறுப்பினராக சேர்ந்தார்.
தற்போது தலைவராக  பதவியேற்ற ஜோஷியின் பதவிக்காலம் மே 12, 2021 முடிவடையும். இவர் தலைவராக நியமிக்கப்பட்டதால், யுபிஎஸ்சியில் ஒரு உறுப்பினர் இடம் காலியாக உள்ளது.

No comments:

Post a comment