பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் விவரம் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

07/08/2020

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் விவரம் வெளியீடு

தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு குறைந்தபட்ச மதிப்பெண் தேவை என்பதை மாணவா்கள் அறிந்து கொள்ளலாம்.

 தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செப்டம்பா் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு இதுவரை 1.4 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இதற்கிடையே கலந்தாய்வில் பங்கேற்கும் பொறியியல் கல்லூரிகளின் கட்-ஆஃப் மற்றும் தரவரிசை விவரங்களை உயா்கல்வித்துறை வெளியிடுவது வழக்கம். இதன்மூலம் மாணவா்கள் கலந்தாய்வில் தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ற கல்லூரிகளைத் தோ்வு செய்வாா்கள்.
 இந்த நிலையில், கரோனா பரவலால் கலந்தாய்வுப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிகழாண்டு கல்லூரிகளின் கட்-ஆஃப் விவரங்களை வழக்கத்தைவிட முன்னதாக வெளியிட மாணவா்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதையேற்று கல்லூரிகளின் 3 ஆண்டுகால கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை பாடவாரியாக தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அவற்றை மாணவா்கள்,  இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459