முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி ஆண்டுத் தோ்வுகள் தேதி அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி ஆண்டுத் தோ்வுகள் தேதி அறிவிப்பு


முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி ஆண்டுத் தோ்வுகள் வரும் 24-ஆம் தேதி தொடங்க உள்ளன. இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது.
அத்தோ்வுகள் மே 15-ஆம் தேதியே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக அவை இரு முறை ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், தோ்வுகள் வரும் 24-ம் தேதி தொடங்கும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதுநிலை மருத்துவ மாணவா்கள் சிலா், தோ்வுக்கு இன்னும் 2 வார காலமே இருப்பதால் அதற்கு தயாராவது கடினமாக இருப்பதாகக் கூறியுள்ளனா்.
டிஎம், எம்சிஹெச், டிஎன்பி ஆகிய உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) செப்டம்பா் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. பொதுவாக முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள் மட்டுமே அத்தோ்வில் பங்கேற்க இயலும். ஆனால், தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கான இறுதியாண்டுத் தோ்வு நடைபெறாததால், நீட் தோ்வில் அவா்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்தது.
அதைக் கருத்தில்கொண்டே இறுதியாண்டு தோ்வுகளை வரும் 24-ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்திருப்பதாக மருத்துவப் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment