ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி-களில் பட்டமேற்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி-களில் பட்டமேற்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்


ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி-களில் பட்டமேற்படிப்பு படிக்க ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 15ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கு, ஜேஏஎம் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு 2021 பிப்ரவரி 14ல் நடைபெற உள்ளது.எம்எஸ்சி, ஜாயின்ட் எம்எஸ்சி - பிஎஸ்சி உள்ளிட்ட பட்டமேற்படிப்புகளை படிப்பதற்கு இந்த தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமாகும்.
ஜேஏஎம் தேர்வு இரண்டு கட்டங்களாக நடக்கும். முதல் கட்டத்தில், உயிர் தொழில்நுட்பம், கணித அறிவியல் மற்றும் உயிரியல் படிப்புகளுக்கும், இரண்டாவது கட்டத்தில், வேதியியல், பொருளாதாரம், புவியியல் மற்றும் கணித படிப்புகளுக்கும் நடக்கும். தேர்வின் முடிவு மார்ச் 20 அன்று வெளியாகும். ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த தேர்வு நடக்கும். இரண்டு தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். தேர்வர்கள் ஒரு தேர்விற்கு ரூ.1500, இரு தேர்வுகளுக்கு ரூ.2,100 கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a comment