தேசிய மாணவர் படை விரிவுபடுத்த பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் - ஆசிரியர் மலர்

Latest

16/08/2020

தேசிய மாணவர் படை விரிவுபடுத்த பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்



 (கோப்புப்படம்)
சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி உரையில் தேசிய மாணவர் படை விரிவாக்கப்படும் என கூறிய நிலையில் இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில்,
இந்திய எல்லை மற்றும் கடலோர பகுதியில் 173 இடங்களிலுள்ள 1000 க்கும் மேற்ப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கண்டறியப்பட்டு தேசிய மாணவர் படையை அறிமுகப்படுத்தப்படும்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு இந்த 173 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதி பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
புதிதாக தேசிய மாணவர் படையில் 83 அலகுகள் உருவாக்கப்படும். எல்லை பகுதிகளில் உள்ள 53 அலகுகளுக்கு ராணுவப்படை, கடலோர பகுதிகளில் உள்ள 20 அலகுகளுக்கு கடற்படை மற்றும் விமானப்படை தளங்களுக்கு அருகில் உள்ள 10 அலகுகளுக்கு விமானப்படை மூலம் பயிற்சி அளிக்கும்.
இப்பகுதிகளில் உருவாக்கப்படும் தேசிய மாணவர் படைகளில் சமூக சேவை, ஒழுக்கம் மற்றும் போர் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், இப்பகுதிகளில் புதிதாக உருவாக்க இருக்கும் தேசிய மாணவர் படை மாநில அரசுடன் இணைந்து அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459