பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

16/08/2020

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு

.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)
மொத்த காலியிடங்கள்: 5846
பணி: Constable (Exe.)-Male – 3433
பணி: Constable (Exe.)-Male (Ex-Servicemen (Others) – 226
பணி: Constable (Exe.)-Male (Ex-Servicemen Commando) – 243
பணி: Constable (Exe.)-Female – 1944
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 21,700 முதல் 69,100 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100, மற்ற அனைத்து பிரிவினர், பெண்கள் பிரிவு விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459