7 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை.. இன்று மட்டும் 5996 கேஸ்கள்.. தமிழகத்தில் கொரோனா தீவிரம்! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

7 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை.. இன்று மட்டும் 5996 கேஸ்கள்.. தமிழகத்தில் கொரோனா தீவிரம்!


தமிழகத்தில் இன்று 5996 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 409238 ஆக உயர்ந்துள்ளது.10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக் தமிழகத்தில் தொடர்ந்து 10 நாட்களாக 5500க்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக தினமும் 5800க்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் பதிவாகி வருகிறது. தமிழகத்தின் கொரோனா கிராப் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், திடீரென லாக்டவுன் முடியும் தருவாயில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.கொரோனாவுக்கு பலியாகும் முதல் தமிழக எம்பி வசந்தகுமார்.. 2ஆவது மக்கள் பிரதிநிதிதமிழகம் எப்படிதமிழகத்தில் தற்போது மொத்த கொரோனா பாதிப்பு 409238 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 52506 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5752 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 349682 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை நிலவரம்தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 102 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா காரணமாக 7050 பேர் மரணம் அடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 1296 பேருக்கு இன்று கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தமாக 131869 பேருக்கு இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.டெஸ்டிங் நிலவரம்தமிழகத்தில் செய்யப்பட்டு இருக்கும் கொரோனா சோதனை விவரம், இன்று 75103 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று சோதனைகள் உயர்த்தப்பட்டுள்ளது. 4573809 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 73186 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4420697 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.உள்மாவட்டங்கள் நிலைமைசென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளது. சேலத்தில் 437 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 9815 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 23926 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 496 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13897 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது

No comments:

Post a comment