அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா? - ஆசிரியர் மலர்

Latest

20/07/2020

அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா?


அண்மையில் பாடத் திட்ட த் குறைப்பதற்காக அரசு 16 பேர் கொண்ட ஒரு குழு அமைத்தது . அதில் 12 பேர் அதிகாரிகள் . மீதி 4 பேர் சிபிஎஸ்இபள்ளிகளை சேர்ந்தவர்கள் . அதில் ஒருவர் கூட அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களோ , தலைமை ஆசிரியர்களோ , பெற்றோர்களோ கிடையாது . சிபிஎஸ்இ பள்ளியை நிர்வகிக்க கூடியவர்கள் தான் உள்ளனர். குழுவில் உள்ள ஒரு வருக்கும் அரசு பள்ளிகள் குறித்து ஏதும் தெரியாது . இது மாதிரியான ஒரு குழு அளிக்கும் அறிக்கைகள் எப்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . கல்வியை நம்பியுள்ள மாணவர்க ளுக்கு நியாயத்தை வழங்க முடியும் . இது போன்று அரசின் பல்வேறு செயல்கள் உள்ளன .

இந்தியாவிலேயே எங்கும் 5 , 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது . தமிழகத்தில்தான் முத லில் அறிவிக்கப்பட்டது . இது பல ருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . பெற்றோர்கள் பலர் எதிர்ப்பு தெரி வித்தனர் . இதை தொடர்ந்து அரசு அந்த முடிவை கைவிட்டது . இதே போல் , கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் , பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் , இந்த ஆண்டிற்கான 10 ம் பொதுத் தேர்வை பெரும்பாலான ஆசிரியர் இயக்கங்கள் தள்ளிவைக்க வேண் டும் என கோரிக்கை வைத்தனர் . ஆனால் ரத்து கூட செய்ய சொல்ல வில்லை . இவை எதையும் அரசு ஏற் காமல் நாங்கள் நடத்தியே தீருவோம் என்று அதற்கான பணிகளை அரசு செய்து வந்தது . பணிகள் பெருமளவு
மேற்கொள்ளப்பட்ட பின்னர் , தேர் வுகள் ரத்து செய்யப்படுவதாக அறி விக்கப்பட்டது . அந்த அறிவிப்பிலும் இதுவரை தனி தேர்வர்களின் நிலை என்னவென்று அரசு தெளிவாக அறிவிக்கவில்லை.

 மற்ற மாணவர்கள் வெற்றி பெற் றவர்கள் என்று அறிவிக்கப்பட்ட தால் , தனித்தேர்வர்களையும் அறி விக்க வேண்டும் . சரி தேர்வுதான் இப்படியென்றால் , வெற்றி அறிவிப் பிலும் சிக்கல் உள்ளது . காலாண்டு , அரையாண்டு மதிப்பெண்களை வைத்து முழு ஆண்டு மதிப்பெண் கள் வழங்குவது பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.

இதேபோல் , 12 ம் வகுப்பு தேர்வு முதன்முறையாக புதிய பாடத்திட் டத்தின் கீழ் நடந்தது . நாம் பாடத்திட் டத்தில் அதிகம் வேண்டும் என்று அதிக பாடங்களை கொண்டு வந்து
விட்டோம் . இது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது . இத னால் 95 சதவீத மதிப்பெண் சி.பி. எஸ்.இ மாணவர்கள் 1000 பேரும் , அரசு பள்ளி மாணவர்கள் 100 பேரும் எடுத்துள்ளனர் . இதனால் கால்நடை கல்லூரி , அரசு இன்ஜி னியரிங் உட்பட அனைத்து இடங்க ளும் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கே செல்லும்.

ஏற்கனவே இதுபோன்று பிரச்னை வரும்போது சி.பி.எஸ்.இ மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் சதவீதத்தை வைத்து 98 சதவீத இடம் அரசு பள்ளி மாணவர்களுக்கும் , 2 சதவிகித இடம் சி.பி.எஸ்.இ மாண வர்களுக்கும் கலைஞர் கொண்டு வந்தார் . அதன்படி அண்ணா பல்க லைகழகம் வழங்கியது .

எனவே இந்த வருடம் இது மாதிரி ஏதேனும் செய்தால் மட்டுமே நமது அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கும் . இதனால் 95 சதவீதம் இடம் அரசு பள்ளி மாணவர்களுக்கும் , 5 சத வீத இடம் சி.பி.எஸ்.இ மாணவர்க ளுக்கும் வழங்க வேண்டும் . அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு பல்வேறு பிரச்னைகள் இருந்தது . கேள்வித்தாள் களும் கடினமாக இருந்தது . புதிய பாடத்திட்டம் பளு , கொரோனா பீதி இதுபோன்ற காரணங்களால் அரசு பள்ளி மாண வர்களின் மதிப்பெண்கள் குறைத் தது . எனவே இந்த வருடம் சதவிகிதப்படி இடம் இல்லையென்றால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை அறிவியல் கல்லூரியில் கூட இடம் இடைக்காது.

தற்போது மாணவர்களின் கல்வியை பொறுத்தவரை அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை , கல்வியாளர்கள் யாரையும் கலந்து யோசிப்பதில்லை . அனுபவம் பெற்ற யாருமே இல்லாமல் வெறும் அதிகா ரிகளை வைத்து முடிவெடுத்தால் அரசு மட்டுமில்லாமல் , மாணவர்க ளுக்கும் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும் . இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நிலை
கேள்விக்குறியாகும் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459