ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகளை குறித்த காலத்திற்குள் திறக்க முடியவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கி உள்ளன.
இந்த ஆன்லைன் வகுப்புகள் வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றும், ஏழைகளுக்கு சாத்தியம் இல்லை என்றும் பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். வகுப்பறையில் நேரடியாக நடத்தப்படும் வகுப்புகள் போன்று ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பலன் அளிக்காது என்றும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டுபாடுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது
* மழலையர் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஒரே நாளில் 30 நிமிடங்களுக்குள் மட்டுமே நடத்த வேண்டும்.
*  1 – 8 வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும்.
*  9 முதல் 12 வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 4 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும்.
என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment