நிதி நெருக்கடி: மருத்துவர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுகிறதா? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

நிதி நெருக்கடி: மருத்துவர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுகிறதா?

மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரசுப் பணியில் சேர்ந்த மருத்துவர்களுக்கு முறையே 8, 15, 17, 20 ஆவது ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்ட 23.10.2009-ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் தங்களுக்கும் அதே போன்று பதவி உயர்வு வழங்கப் பட வேண்டும்; அதன் அடிப்படையில் ஓய்வூதியம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சட்டப் போராட்டம் நடத்தினர். அவ்வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அவர்களுக்கு பின்தேதியிட்டு பதவி உயர்வு வழங்க சுகாதாரத்துறை ஆணையிட்டது.
அதனடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கி தமிழக நிதித்துறை கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஆணையிட்டது.
அதன்படி, 2009ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசின் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “அரசாணை திருத்தப்படும் போது, 2009-ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கணிசமாகக் குறையும். அது மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

No comments:

Post a comment