கொரோனா வைரஸ் அறிகுறிகள் - வாந்தி, டயாரியா இருக்கா உடனே டெஸ்ட் பண்ணுங்க - ஆசிரியர் மலர்

Latest

05/07/2020

கொரோனா வைரஸ் அறிகுறிகள் - வாந்தி, டயாரியா இருக்கா உடனே டெஸ்ட் பண்ணுங்க


சென்னை: கோவிட் 19 எனப்படும் நாவல் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 1கோடிக்கும் மேற்பட்ட மக்களை பற்றியுள்ளது. நோயுடன் எதிர்த்து போராடி 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டு விட்டனர். 6 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவோ, வேறு நோய் பாதிப்பு இருந்தால் மட்டுமே உயிரிழப்பு ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் () அறிவுறுத்தியுள்ளது. தலைவலி,வாந்தி, வயிற்றுப்போக்கு வந்தாலும் கோவிட் 19 டெஸ்ட் எடுப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, மூச்சுவிடுவதில் சிரமம், வறட்டு இருமல் வந்தாலே கொரோனா வைரஸ் பரிசோதனை அவசியம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய ஆறு அறிகுறிகள் தென்பட்டாலும் கோவிட் 19 டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களுக்கு சாதாரண அறிகுறிகளையும் தாண்டி வயிற்றுப் போக்கு, வாந்தி, மார்பு அல்லது வயிற்றுப்
பகுதியில் வலி, மூக்குச் சளி, வறட்டுத் தொண்டை வலி, குழப்பமான மனநிலை உள்ளிட்ட அறிகுறிகளும் தென்பட்டுள்ளன
. இதனுடன் கூடுதலாக மிகச் சிலருக்கு ருசி இல்லாமல் போவது, சுவாசத்தில் நுகர்வு திறன் இல்லாமல் போவது உள்ளிட்ட அறிகுறிகளும் தென்பட்டுள்ளன. அறிகுறிகள் என்னென்னகோவிட் 19 தொற்று நோய் அறிகுறிகளில் முதன்மையானது சளி, காய்ச்சல், வறட்டு இருமல். தலைவலி, காய்ச்சல், இருமல் போன்ற குளிர்க் காய்ச்சலுக்கு இருந்த அறிகுறிகளே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது உடலில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய அளவுக்கு தீவிரமான நோயாக கொரோனா தொற்று மாறியிருப்பதாக அஞ்சப்படுகிறது.இதய பாதிப்புஒருவரை பாதிக்கும் கொரோனா வைரஸானது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாக்கி, அதன் மூலம் படிப்படியாக உடல் உறுப்புகளை பாதிக்கிறது. கொரோனா வைரஸால் இதய பாதிப்பு மற்றும் பக்கவாதம் வர வாய்ப்புள்ளதாக சில மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.இளைஞர்களுக்கு பாதிப்புகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளனர். கொரோனா பாதித்த ஆண்களின் பிறப்பு உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவாம். கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான இளைஞர்கள் நோய் குணமடைந்த பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா அறிகுறிகளில் மாற்றம்தலைவலி, காய்ச்சல், இருமல், உடல் நடுக்கம், உடல் வலி போன்றவை இருந்தால் கொரோனா தொற்று அறிகுறி என்று கூறப்பட்டது. மூக்கில் இருந்து சளி, தண்ணீர் ஒழுகுதல்,தொண்டைவலி இருந்தாலும் கொரோனா என்று கூறப்பட்டது. தற்போது வயிற்று வலி, செரிமானப்பிரச்சினை,டயாரியா, வயிற்றுப்போக்கு, வாந்தி, பேதி போன்றவையும் கொரோனாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.அறிகுறி இல்லாமல் பாதிப்புநோய் அறிகுறிகள் இல்லாமலேயே ஏராளமானோருக்கு கொரோனா தனது கை வரிசையை காட்டி வருகிறது. சாதாரணமாக இருக்கும் போதே திடீர் உடல் நலக்குறைவுக்கு ஆளாகின்றனர் அவர்களை பரிசோதித்தால் மட்டுமே கொரோனா இருப்பது தெரியவருகிறது. தற்போது புதிய புதிய அறிகுறிகளும் உருவாகி மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.உடனே டெஸ்ட் பண்ணுங்கவாந்தி பேதி வந்தால் உடலின் நீர்சத்து குறையும் இதனால் உடல் அசதி ஏற்படும்.
சாதாரணமாக டயாரியா பிரச்சினைக்கு உப்பு சர்க்கரை கரைசலை குடித்து உடலில் நீர் சத்து பாதிக்காமல் சமாளித்து விடலாம். இதுவே கொரோனா அறிகுறியாக இருக்கும் பட்சத்தில் உடலில் அசதி அதிகமாவதோடு, சர்க்கரை லெவல் குறையும், ரத்த அழுத்தமும் குறைந்து உடலில் ஒருவித குழப்பத்தை ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே வாந்தி பேதி வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலே மருத்துவ பரிசோதனை அவசியம் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.திடீர் மரணங்கள்கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை 67 நோயாளிகள் இதுபோன்ற வாந்தி பேதி தாக்குதலால் மருத்துவமனைகளில் அனுமிதிக்கப்பட்டு சில மணிநேரங்களில் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களை பரிசோதனை செய்த போதுதான் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று புதிய அறிகுறிகள்தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், உடல் வலி, குளிர், உடல் நடுக்கம், வாசனை, ருசி உணர்வு இல்லாமல் இருப்பது கொரோனா வைரஸ் அறிகுறி என்று கூறப்பட்டது. தற்போது காய்ச்சல், குளிர் நடுக்கம், இருமல், தொண்டை வலி, மூக்கில் ஒழுகுதல், ருசி உணர்வு குறைதல், தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவையும் கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிதான் என்று மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிய நோய் தொற்று அறிகுறிகள் என குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459