ஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு


ஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் 6-ம் கட்ட ஊரடங்கு போல முழு ஊரடங்காக இருக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த முதல்வர் பழனிசாமி ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் இதில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில் தளர்வு, தடை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளுக்கு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:
“நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 & 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டுள்ளதுபோன்று ஆகஸ்ட் மாதத்திலும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமலாகும்.

No comments:

Post a comment