வரும் 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

வரும் 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

சென்னை,
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்தவர் என்று கல்வியாளர்களால் மட்டும் அல்லாது அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார். இந்த மாதம் வரும் 15 ஆம் தேதி அவரது பிறந்தநாள் ஆகும். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பள்ளிகளில் காமராஜர் உருவப்படம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். காமராஜர் பற்றி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
இந்நிலையில் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் வழக்கம் போல் கல்வி வளர்ச்சி நாளன்று நடைபெறும் நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் வரும் 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும் 15 ஆம் தேதியன்று அனைத்து கல்வி அலுவலகங்களிலும் காமராஜரின் உருவப்படத்தை அலங்கரித்து கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment