அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் அரசு முடிவை எதிர்த்து வழக்கு - ஆசிரியர் மலர்

Latest

08/07/2020

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் அரசு முடிவை எதிர்த்து வழக்கு

ஆனால் டிரம்ப் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை விரைவாக திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
பல்கலைக்கழங்களின் ஆன்-லைன் முறைக்கு செக் வைக்க எண்ணிய டிரம்ப் அரசு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் அதிரடியாக அறிவித்தது.
இதுகுறித்து அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ஐ.சி.இ.,) தெரிவித்துள்ளதாவது:-
கொரோனா பரவலால், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்து பாடப்பிரிவுகளையும் ஆன்லைன் கல்வி முறைக்கு மாற்றி வருகின்றன. அதனால், அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், ஆன்லைன் கல்வி முறைக்கு மாறி வருகின்றனர். அவ்வாறு ஆன்லைன் கல்விக்கு மாறிய மாணவர்கள், அமெரிக்காவில் தொடர்ந்து தங்க முடியாது.
அமெரிக்காவில் தங்கியிருந்து படிக்க விரும்பினால் நேரடியாக பாடம் எடுக்கும் பள்ளிகள் அல்லது கல்லூரிகள் சேர்ந்து படிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், குடியேற்றம் தொடர்பான விதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். அமெரிக்காவில் இருந்து அவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர டிரம்ப் வெளிப்படையாக ‘‘ஹார்வார்டு பல்கலைக்கழகம் முற்றிலும் ஆன்லைன் முறைக்கு மாறுவது கேலிக்கூத்தானது’’ என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் போஸ்டனில் உள்ள மாவட்ட கோர்ட்டில் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் நடவடிக்கையை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்று ஹார்வார்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. 
அதேபோல் மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனமும் வழக்கு தொடர்ந்துள்ளது. ‘‘அரசின் உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது. இதனால் ஜூலை 6-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்க வேண்டும். மார்ச் மாத உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் கொள்கையின்படி வெளிநாட்டு வீரர்கள் அமெரிக்காவில் தொடர்ந்து தங்குவார்கள், புதிய மாணவர்களும் அமெரிக்காவுக்கு வருவார்கள் என்று நம்பியிருந்தோம். ’’ என ஹார்வார்டு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459