தமிழ்நாடு முழுக்க லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? - நாளை முடிவெடுக்கிறார் முதல்வர் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழ்நாடு முழுக்க லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? - நாளை முடிவெடுக்கிறார் முதல்வர்


தமிழ்நாடு முழுவதும் தினசரியும் 3500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 80 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ நிபுணர் குழுவினர் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் லாக்டவுனை தமிழகம் முழுவதும் நீடிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சேலம் தலைவாசலில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். சேலத்தில் தலைவாசலில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழா கடந்த மாதம் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்றது. அங்கு சுமார் 1100 ஏக்கரில் ரூ.1022 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது
. இந்த பூங்காவின் தேவைக்கு மேட்டூர் அணையிலிருந்து ரூ.262 கோடியில் தண்ணீர் கொண்டுவரும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.அங்கு பேசிய முதல்வர் பழனிச்சாமி, ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் சேலத்தில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. சேலம் கால்நடை பூங்காவிற்கு ஆயிரத்து 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பூங்கா மூலம் நாட்டின் மாடுகள், கோழிகள், நாய்கள் உள்ளிட்ட உயிரினங்கள் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்று நிபுணர்களாலேயே கணிக்க முடியவில்லை. கொரோனா பரவலை தடுக்க வல்லரசு நாடுகளே திணறுகின்றன. தமிழக அரசு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது எனவும் கூறினார். கொரோனா பரவலை தடுக்க எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் எந்த ஆலோசனையும் கூறவில்லை என்று கூறிய அவர், என்னையும், அரசையும் குறை கூறுவது மட்டுமே அவருக்கு வேலையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். காவிரி- வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட அலுவலகம் திறப்பு அப்போது, லாக் டவுன் தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்னர் நாளை முடிவெடுக்கப்படும் என்று கூறினார். தமிழ்நாடு முழுவதும் தினசரியும் 3500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 80 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை மறுதினம் அதாவது ஜூன் 30 ஆம் தேதியுடன் லாக்டவுன் நிறைவடைகிறது. சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரையில் தீவிர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் நீடிக்கப்படுமா? ஆறு மாவட்டங்களில் உள்ளது போல மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது
.இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இதில் மருத்துவ நிபுணர் குழுவினர் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை குறித்து முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்க உள்ளனர். மேலும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆலோசனைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

No comments:

Post a comment