தூய தமிழில் பேசுவோருக்கு ரூ. 5 ஆயிரம் பரிசுத்தொகை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தூய தமிழில் பேசுவோருக்கு ரூ. 5 ஆயிரம் பரிசுத்தொகை


தூய தமிழில் பேசுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங் கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குநர் வெளியிட்டு உள்ள ஓர் அறிவிப்பில், நடை முறை வாழ்க்கையில் கலப்புச் சொற்கள் தவிர்த்து தூய தமிழில் பேசு வோரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 பேருக்கு இந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தகுதியுடையோர் sorkuvai.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நாடறிந்த தமிழ்ப் பற்றாளர்கள் இருவரிடம் தமது தமிழ்ப் பற்றை உறுதி செய்து,சான்றிதழ் பெற்று, சுய விவர குறிப்பு களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள்,   ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a comment