யு.பி.எஸ்.சி தேர்வு புதிய அட்டவணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

05/06/2020

யு.பி.எஸ்.சி தேர்வு புதிய அட்டவணை வெளியீடு


புதுடில்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வு தேதியை புதிதாக அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு காலி பணியிடங்களுக்கு அதிகாரிகளை தேர்வு செய்கிறது. அதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற குடிமைப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, மே 31-ல் முதல் நிலை தேர்வு நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் தேர்வை திட்டமிட்டப்படி நடத்த முடியவில்லை.
இந்த நிலையில், திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை யு.பி.எஸ்.சி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வு அக்டோபர் 20-ம் தேதி நடைபெறும். முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு 2021, ஜன., 8-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் யு.பி.எஸ்.சி தேர்வுக்காக, இந்த ஆண்டு பத்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459