டிபிஐ வளாகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா! - ஆசிரியர் மலர்

Latest

 




05/06/2020

டிபிஐ வளாகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா!


தேர்வுத்துறை இயக்குநரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து , அதே வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண் இயக்குநரின் கார் ஓட்டுநருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இதையடுத்து டிபிஐ வளாக பணியாளர்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது . சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை யில் அமைந்துள்ளது டிபிஐ வளாகம் . இந்த வளாகத்தின் உள்ளே பள்ளிக் கல்வித்துறை சார்ந்த பல்வேறு அலுவலக கட்டிடங்கள் உள்ளன .

இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வித்துறை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் . இந்நிலையில் , அங்குள்ள தேர் வுத்துறையின் இயக்குநரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது .


இதையடுத்து அங் குள்ள பணியாளர்கள் பதற்றம் அடைந்த னர் . தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி தனது அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றிக்கொண்டார் . இதையடுத்து டிபிஐ வளாகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பணிக்கு வருகின்றனர் .


இந்த பரபரப்பு அடங்குவதற் குள் அதே வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண் இயக்குரின் கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று இருப் பது நேற்று உறுதி செய்யப்பட்டது . மேலும் அந்த ஓட்டுநரின் மகன் அதே அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் . அவரும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் . இதைய டுத்து ஓட்டுநரின் மகனுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது . இதன் காரணமாக , டிபிஐ வளாகத்தில் பணி யாளர்கள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459