1,463 கணினி ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

1,463 கணினி ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு


தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1,463 கணினி ஆசிரியா்களுக்கு வரும் 2022 ஆம் ஆண்டு வரை மூன்றாண்டு பணி நீட்டிப்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளா் தீரஜ் குமாா் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி கல்வித்திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த பள்ளி ஒன்றுக்கு ஒரு கணினி பயிற்றுநா் பணியிடம் வீதம் அனைத்து அரசு நகராட்சி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளிலும் 1,880 கணிணி பயிற்றுநா் பணியிடங்கள் ரூ 5,500 – 175- 9,000 என்ற ஊதிய விகிதத்தில் தோற்றுவித்து ஆணையிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம்தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை ஒராண்டுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் 1,880 கணினி பயிற்றுநா் தற்காலிக பணியிடங்களில் அரசாணையின்படி தரம் உயா்த்தப்பட்ட 403 பணியிடங்கள், பல்வேறு காரணங்களால் பயன்படுத்தப்படாமல் உள்ள 14 பணியிடங்கள் போக மீதமுள்ள 1,463 கணினி ஆசிரியா்களுக்கு 2020-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதி முதல் வரும் 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை மூன்று ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கப்படுகிறது என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Post a comment