தத்கால் டிக்கெட் முன்பதிவு சேவையை மீண்டும் கொண்டு வந்தது IRCTC! - ஆசிரியர் மலர்

Latest

 




29/05/2020

தத்கால் டிக்கெட் முன்பதிவு சேவையை மீண்டும் கொண்டு வந்தது IRCTC!


ஊரடங்குக்கு மத்தியில் IRCTC சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பிற்காக காத்திருக்கும் பல லட்சம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தத்கால் டிக்கெட் முன்பதிவு சேவையை அறிமுகம் செய்தது IRCTC!

ஊரடங்குக்கு மத்தியில் IRCTC சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பிற்காக காத்திருக்கும் பல லட்சம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தத்கால் டிக்கெட் முன்பதிவு சேவையை அறிமுகம் செய்தது IRCTC!
இந்த அறிவிப்பின் படி ஜூன் 1 முதல் இயங்கும் அனைத்து சிறப்பு ரயில்களிலும், மற்ற ரயில்களிலும் தத்கால் டிக்கெட் முன்பதிவு தொடங்க இந்திய ரயில்வே அனுமதி அளித்துள்ளது.
இப்போது இந்திய ரயில்வே 30 சிறப்பு ரயில்களை இயக்குகிறது, 200 ரயில்கள் ஜூன் 1 முதல் தொடங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் சேவை தற்போது நடைமுறையில் இருக்கும் நிலையில், இந்திய ரயில்வேயின் சமீபத்திய அறிவிப்பு., தத்கால் மற்றும் பிரீமியம் தத்கால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளில் எந்த மாற்றமும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
அதாவது பயணிகள் முன்பு போலவே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அத்தோடு இந்த 230 ரயில்களுக்கான முன்பதிவு காலத்தையும் இந்திய ரயில்வே நீட்டித்துள்ளது. IRCTC-யின் இந்த சிறப்பு ரயில்களில் பார்சல்கள் மற்றும் பொருட்களின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி பயணிகள் காலை 8 மணி முதல் IRCTC-யின் வலைத்தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இந்த ரயில்களில் உடனடியாக முன்பதிவு செய்வதற்கான வசதியை ரயில்வே இதுவரை வழங்கவில்லை. இந்த அனைத்து சிறப்பு ரயில்களிலும்
, உடனடி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் அளிக்கப்படும். அறிக்கையின் படி, பிரீமியம் தத்கால் டிக்கெட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, மே 12 முதல் இந்த சேவையை சிறிது சிறிதாக தொடங்குவதாக இந்திய ரயில்வே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரயில்வே தற்போது 15 ஜோடி ரயில்களை இயக்கி வருகிறது , அதாவது 30 ரயில்கள் தலைநகர் டெல்லியில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்கின்றன. ஜூன் 1 முதல் மேலும் 200 ரயில்களை இயக்க ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு தளமான irctc.co.in மற்றும் IRCTC மொபைல் செயலியில் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மொழியாக்கம் – லீமா

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459