மாணவர்களை தொடர்பு கொண்டு, தேர்வு கால அட்டவணை குறித்து ஆசிரியர்கள் விளக்க வேண்டும் - தமிழக அரசு - ஆசிரியர் மலர்

Latest

 




19/05/2020

மாணவர்களை தொடர்பு கொண்டு, தேர்வு கால அட்டவணை குறித்து ஆசிரியர்கள் விளக்க வேண்டும் - தமிழக அரசு


சென்னை,
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  
ஜூன் 1 ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.  மேலும், சானிடைசர், சோப், கை கழுவுவதற்கான நீர் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி  வைத்திருக்க வேண்டும்.  

மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.  மாணவர்களை தொடர்பு கொண்டு, தேர்வு கால அட்டவணை குறித்து ஆசிரியர்கள் விளக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில்  அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459