அரசு ஊழியர்கள் மனஅழுத்தத்தை குறைக்க மாற்று ஏற்பாடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

அரசு ஊழியர்கள் மனஅழுத்தத்தை குறைக்க மாற்று ஏற்பாடு


ஊட்டி:
கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கவுரவிக்கவும், மனஅழுத்தத்தை போக்கவும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சென்று பார்வையிட கலெக்டர் அனுமதி அளித்து உள்ளார்.
அதன்படி, டாக்டர்கள், செவிலியர்கள் கடந்த வாரம் மலர் அலங்காரங்களை கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள், அனைத்துத்துறை ஊழியர்கள் பணிக்கு வந்தனர். ஆனால் அவர்களின் மனஅமைதிக்காகவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் ஊட்டி தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
. அதன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் தாவரவியல் பூங்காவை பார்வையிட சென்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கலெக்டர் உள்பட அரசு ஊழியர்கள் பூங்கா பணியாளர்கள் மலர்கள் வழங்கியும், கைதட்டியும் வரவேற்பு அளித்தனர். மலர் மாடங்களில் பூத்து குலுங்கிய மலர்கள், கண்ணாடி மாளிகை, மலர் அலங்காரங்கள் ஆகியவற்றை கண்டு ரசித்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அவர்கள் குடும்பத்தினரோடு பூங்காவில் வலம் வந்தனர். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a comment