தேங்காய்க் கஞ்சி தயாரிக்கும் முறை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Friday, 22 May 2020

தேங்காய்க் கஞ்சி தயாரிக்கும் முறை


கோடை வெப்பத்தைத் தணிக்க பலவிதமான உணவுகள் இருந்தாலும் அதில் முக்கிய இடம் பெறுவது திரவ உணவுகள். அவற்றில் ஒன்று இந்தத் தேங்காய்க் கஞ்சி. இது உடல்சூட்டைத் தணிக்கும். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தும். தலைமுடியையும் சருமத்தையும் மினுமினுப்பாக்கும்.
இந்தக் கஞ்சி உணவைப் பெண்கள் மாதவிடாய் நேரங்களில் எடுக்கும்போது வயிற்றுவலியைச் சரிசெய்து சோர்வைப் போக்கும். இதில் வெந்தயம், பூண்டு சேருவதால் அனைவருக்கும் ஏற்ற சிறந்த ஊட்டச்சத்துக் கஞ்சியாகவும் அமையும்.
என்ன தேவை?
வரகரிசி, குதிரைவாலி அரிசி அல்லது பச்சரிசி - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
பூண்டு - 10 பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 200 மில்லி
தண்ணீர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
முதலில் ஒரு குக்கரில் கழுவி சுத்தம் செய்த அரிசியுடன் தேங்காய்த் துருவல், பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். ஆறியதும் கடைந்து, அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து சூடாகப் பருகவும். இதைக் காலை நேர சிற்றுண்டியாக அனைவரும் உண்ணலாம்.

No comments:

Post a comment