ஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு


பத்தாம் வகுப்புத் தேர்வெழுத வரும் வெளியூர் மாணவர்களுக்கும் அவர்களுடன் துணைக்கு வரும் ஒருவருக்கும் பயண அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்புள்ள இடங்களில் ஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சூழ்நிலை காரணமாகத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு வைப்பது குறித்து நாளை முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.