12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு - ஆசிரியர் மலர்

Latest

17/05/2020

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு


 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. 
தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். மே 17 ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில், 12 மாவட்டங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் மீதியுள்ள 25 மாவட்டங்களில் சில புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. 

மேலும், தளர்வு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் 100 சதவீதம் பணியாளர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக  மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459