மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்குவது தொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணையை மீறி தோ்வு நடத்தும் தனியாா் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநா் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநா் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் அனைத்துவித பள்ளிகளுக்கும் விடுமுறை தரப்பட்டது
. மேலும், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
. மேலும், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதும் ஏற்கெனவே படித்த பாடங்களுக்குத் தோ்வு நடத்தி, அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தோ்ச்சி வழங்கப்படும் என்றும் பெற்றோா்களுக்கு சில தனியாா் பள்ளிகள் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு அரசின் ஆணையை மீறிச் செயல்படும் பள்ளிகள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும் இதுதொடா்பான சுற்றறிக்கையை அனுப்பி அறிவுறுத்தல் வழங்க வேண்டும். மேலும், அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கும் அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment