இளநிலை மதிப்பெண் அடிப்படையில் விஐடியில் எம்டெக் மாணவர் சேர்க்கை - ஆசிரியர் மலர்

Latest

29/05/2020

இளநிலை மதிப்பெண் அடிப்படையில் விஐடியில் எம்டெக் மாணவர் சேர்க்கை


விஐடி பல்கலைக்கழகத்தில் இளநிலை மதிப்பெண் அடிப்படையில் எம்டெக் மற்றும் எம்சிஏ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதுகுறித்து விஐடி பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘விஐடியில் எம்டெக், எம்சிஏ படிப்பில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு நடைபெறும். ஆனால், கரோனா அசாதாரண சூழல் காரணமாக இந்த ஆண்டு எம்டெக், எம்சிஏ படிப்பில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு இல்லாமல் இளநிலை படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.

மாணவர்கள் அனைவரும் www.vit.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 20-ம் தேதி கடைசி நாளாகும்.
ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள மாணவர்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்களை தவிர மற்ற தகவல்களை வரும் ஜூன் 20-ம் தேதி வரை திருத்தம்செய்து கொள்ளலாம். ‘கேட்’ தேர்வு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மாணவர்கள் சேர்க்கை, கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும்.


ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி வகுப்புகள் தொடங்கும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள் விஐடியில் நுழைவுத் தேர்வு இல்லாமல் நேரடியாக 5 ஆண்டு இன்டகரேடட்எம்டெக் மற்றும் எம்எஸ்சி படிப்பில் சேரலாம். இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு ஜூலை 15-ம் தேதி கடைசி நாள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459