80 சதவீத பாடத்திட்டங்களில் இருந்து மட்டும் வினாத்தாள் தயாரிக்கப்படும் - அண்ணா பல்கலைக்கழகம் - ஆசிரியர் மலர்

Latest

 




06/05/2020

80 சதவீத பாடத்திட்டங்களில் இருந்து மட்டும் வினாத்தாள் தயாரிக்கப்படும் - அண்ணா பல்கலைக்கழகம்


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் வருகிற பருவ தேர்வுக்கு 80 சதவீத பாடத்திட்டங்களில் இருந்து மட்டும் வினாத்தாள் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கொரோனா பரவல் காரணமாக மார்ச் -17ம் தேதியுடன் கல்லூரி வேலை நாட்கள் நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக பாடத்திட்டங்களை முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை என பல்கலைகழக நிர்வாகத்திடம் பேராசிரியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வருகிற பருவ தேர்வுக்கு நான்கு யூனிட்டுகளில் இருந்து மட்டுமே வினாத்தாள் தயாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459