கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் பரபரப்பாக இயங்கி வரும் டி.எம்.எஸ் அலுவலக வளாகத்துக்கு சீல் வைக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் பரவி வருகிறது. டிபிஹெச் என்கின்ற பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் அலுவலகம், டி.எம்.எஸ் என்ற ஊரக மருத்துவப் பணிகள் கழக இயக்குநர் அலுவலகம்
, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை, 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சுகாதாரத் துறை, காசநோய் தடுப்பு மற்றும் தேசிய சுகாதாரத் திட்டம், கொரோனா உயர் ரக ஆய்வகம் போன்ற பல்வேறு முக்கிய அலுவலகங்கள் இங்கு இயங்கி வருகின்றன இந்த நிலையில் டி.எம்.எஸ் வளாகத்தில் சீல் என்ற செய்திகள் பரவியதைப் பற்றி விசாரித்தோம்... “ஏற்கனவே டி.எம்.எஸ் அலுவலகத்தில் பணிசெய்த எழுத்தருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது. அதன்பிறகு ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வேலை செய்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பிலிருந்து வருகிறார்கள்.< நேற்று முன்தினம் (மே 4) ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று (மே 5) இரண்டு ஓட்டுநருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானதால்,
மதியம் முதல் மாலை நேரம் வரையில் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் அனைத்து கட்டடங்களிலும் கிருமி நாசினி அடித்து சுத்தம் செய்தார்கள் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்குக் குறுகிய அறைகள் ஒதுக்கியுள்ளதால், அதில் கும்பலாக ஓய்வுவெடுக்கும்போது வைரஸ் பரவியுள்ளதாகச் சொல்கிறார்கள் மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி வருவதால் 108 ஆம்புலன்ஸ் இயங்க பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்று அஞ்சுகிறார்கள் அதிகாரிகள். மேலும் டி.எம்.எஸ் அலுவலகத்துக்குச் சீல் வைக்கலாமா அல்லது முழுமையாகச் சுத்தப்படுத்தலாமா என்ற ஆலோசனையில் உயரதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்” என்று டி.எம்.எஸ் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.