ஏழை குழந்தைகளுக்கு 75 லட்சம் கோடி ஒதுக்குங்கள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 20 May 2020

ஏழை குழந்தைகளுக்கு 75 லட்சம் கோடி ஒதுக்குங்கள்

வாஷிங்டன்: கொரோனா ஊரடங்குக்கு பிறகு, உலகில் உள்ள ஏழை எளிய குழந்தைகளின் நலனுக்காக, அனைத்து நாட்டு அரசுகளும் ஒன்றிணைந்து, 75 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்’ என, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் கைலாஷ் சத்தியார்த்தி உட்பட, நோபல் வென்ற 88 உலக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால், சர்வதேச அளவில், பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு பிறகான காலகட்டத்தில், ஏழை எளிய குழந்தைகளின் நலன் குறித்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,
திபெத்தை சேர்ந்த புத்த மத துறவி தலாய் லாமா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் கார்டன் ப்ரவுன், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் கைலாஷ் சத்தியார்த்தி உட்பட, நோபல் வென்ற 88 உலக தலைவர்கள், சில எதிர்கால திட்ட அறிக்கையை முன் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து நாட்டு அரசாங்கங்களும், தங்கள் கொரோனா நிவாரண நிதியில் இருந்து, 20 சதவீதத்தை, ஏழை எளிய மக்களுக்கு செலவிட வேண்டும். இதன் மூலம், ஒரு கோடி உயிர்கள் பாதுகாக்கப்படும்
.ஊரடங்கு மற்றும் அதற்கு பிறகான காலகட்டத்தில், ஏழை எளிய குழந்தைகளின் நலனுக்காக, 75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட வேண்டும். இந்த தொகை, ஐ.நா.,வின் கொரோனா நிவாரண பணிகளுக்கு, செலவிடப்பட வேண்டும்.
குறைந்த வருவாய் உள்ள மக்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும். சுகாதாரம், குடிநீர், துப்புரவு மற்றும் கல்விக்கான நிலையான வளர்ச்சி திட்டங்களுக்கு, இந்த தொகை, பெரிதும் உதவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a comment