அதிர்ச்சி....கொரோனா பாதிப்பிலும் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்த தனியார் பள்ளிகள் கோரிக்கை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 20 May 2020

அதிர்ச்சி....கொரோனா பாதிப்பிலும் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்த தனியார் பள்ளிகள் கோரிக்கைசென்னை, .
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் பிரச்சினைகள் குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி ஆணையர் சி.ஜி.தாமஸ் வைத்யன் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவுக்கு தனியார் பள்ளிகளை சார்ந்த சங்கங்கள் தங்களுடைய பரிந்துரைகளை அனுப்பி இருக்கின்றனர் இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் உயர்நிலை பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பள்ளிக்கல்வி ஆணையருக்கு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறந்து கற்றல், கற்பித்தல் பணிகளை தொடர அனுமதிக்கவேண்டும்

இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.ராஜா, பொதுச்செயலாளர் டி.சி.இளங்கோவன் ஆகியோர் பள்ளிக்கல்வி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
* பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மொழி மற்றும் பிற பாடங்களில் 20 சதவீதம் பாடசுமையை குறைக்க வேண்டுகிறோம்.
தற்போதுள்ள சூழ்நிலையில் தனியார் பள்ளிகள் பல்வேறு நிர்வாக சிக்கல்களை சந்தித்துவரும் நிலையில், தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தி வழங்க கட்டண நிர்ணயக்குழுவுக்கு பரிந்துரை செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
* ஜூலை முதல்வாரம் பள்ளிகள் இயங்கவும் பள்ளிகள் பின்பற்றவேண்டிய உரிய நடைமுறைகளை வழங்க ஆவண செய்யவேண்டும். மாணவர்கள் பள்ளிகளுக்கு சிரமமின்றி வந்து செல்லும் வகையில் ஒருநாள்விட்டு ஒருநாள் வரும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகம் வழங்கப்படுவது போல, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment