அம்பன்’ அதித்தீவிர புயல் 5 சூறாவளிகளுக்குச் சமமானது - இந்திய வானிலை ஆய்வு மையம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 19 May 2020

அம்பன்’ அதித்தீவிர புயல் 5 சூறாவளிகளுக்குச் சமமானது - இந்திய வானிலை ஆய்வு மையம்


‘அம்பன்’ அதித்தீவிர புயல் மேற்கு வங்க கடற்கரையில் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மிகக்கடுமையான சூறாவளி புயலாக 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு 220 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்தப் புயலானது, 1999-ம் ஆண்டு ஒடிசாவைத் தாக்கி சுமார் 10,000 பேரின் உயிரைக் குடித்த சூப்பர் புயலுக்குப் பின்னர் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மிக மோசமான புயல் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் மம்தா பானர்ஜி கூறும்போது ‘‘மேற்கு வங்காளம் மக்கள் நாளை காலை 11 மணி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம். இதன் காரணமாகக் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக முகாமில் இருப்பவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்’’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a comment