தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 19 May 2020

தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி


தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 760 ஆக இருந்தது.மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 406 பேர் குணமடைந்திருந்தனர். ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 81 இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது .
அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 895  ஆக உயர்ந்துள்ளது. 
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3  பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a comment