இந்தியாவில் உச்சம் தொட்ட ஒருநாள் உயர்வு கொரோனாவால் 4213 பேர் பாதிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Monday, 11 May 2020

இந்தியாவில் உச்சம் தொட்ட ஒருநாள் உயர்வு கொரோனாவால் 4213 பேர் பாதிப்பு


புதுடெல்லி: 
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,213 புதிய கொரோனா பாதிப்புடன் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது, இது இதுவரை மொத்தம் 67,152 பாதிப்புகளாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.

சமீபத்திய தசாப்தங்களில் உலகம் கண்ட மிகத் தொற்றுநோய்களில் ஒன்றான கொரோனா  வைரஸ் தொற்றால்
இந்தியாவில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2,206 ஆக உயர்ந்துள்ளது; கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் இறந்து உள்ளனர்.
மீட்பு விகிதம் இன்று காலை 31.14 சதவீதமாக இருந்தது, கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்ட 26.59 சதவீதத்தை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய பாதிப்பு  எதுவும் வெளிவரவில்லை. அவைகள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, கோவா, ஜம்மு-காஷ்மீர், லடாக்,
மணிப்பூர் , ஒடிசா, மிசோரம் மற்றும் புதுச்சேரி 
தமிழகத்தில் நேற்று 669 புதிய கொரோனா பாதிப்பு  மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகி உள்ளது. தொற்றுநோயால் நாட்டின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான தென் மாநிலம் தமிழகம் ஆகும். இதுவரை 7,200 க்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பதிவு செய்துள்ளது.